search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் போலீஸ்காரரை தாக்கிய 2 பேர் கைது

    ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் போலீஸ்காரரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை:

    ஈரோட்டில் இருந்து புறப்பட்ட ஒரு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு ஜோலார்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது முன்பதிவு பெட்டியின் (எஸ்-6) கழிவறைக்கு செல்லும் வழியில் 2 வாலிபர்கள் தகராறில் ஈடுபடுவதாக பயணிகள், டிக்கெட் பரிசோதகரிடம் புகார் செய்தனர்.

    அந்த வாலிபர்கள் பொதுப்பிரிவு பெட்டியில் டிக்கெட் எடுத்து முன்பதிவு பெட்டியில் ஏறி பயணம் செய்தது தெரியவந்தது.

    இதுகுறித்து டிக்கெட் பரிசோதகர், ஓடும் ரெயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஈரோடு 15-வது பட்டாலியனை சேர்ந்த போலீஸ்காரர் பெருமாளிடம் கூறினார்.

    அவர் அங்கு சென்று வாலிபர்களை பொதுப்பிரிவு பெட்டிக்கு செல்லும்படி கூறினார். ஆனால் அதனை ஏற்க மறுத்த வாலிபர்கள் திடீரென போலீஸ்காரர் பெருமாளை சரமாரியாக தாக்கினர். இதை பார்த்த பயணிகள் வாலிபர்களை தடுத்தனர்.

    இதுகுறித்து போலீஸ்காரர் பெருமாள் காட்பாடி ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அந்த ரெயில் காட்பாடிக்கு வந்து நடைமேடையில் நின்றதும் சப்-இன்ஸ்பெக்டர் எழில்வேந்தன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட ரெயில் பெட்டிக்கு சென்று அந்த வாலிபர்களை பிடித்து பிடித்து போலீஸ் நிலையத்துககு அழைத்து சென்று விசாரித்தனர்.

    இருவரும் திருவாரூர் மாவட்டம் மான்னார்குடியை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் அசோக்குமார் (வயது 31). திருச்சியை சேர்ந்த அறிவழகன் (31) எனத் தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது காட்பாடி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×