search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நல்லக்கண்ணு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    நல்லக்கண்ணு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து விழுப்புரத்தில் நல்லக்கண்ணு தலைமையில் ஆர்ப்பாட்டம்

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு நல்லக்கண்ணு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தையொட்டி உள்ள 5 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக ஆழ்துளை கிணறுகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இத்திட்டம் கொண்டுவரப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிடும். மேலும் விளைநிலங்கள் அனைத்து பாலைவனம் ஆகும்.

    எனவே இத்திட்டத்தை மத்திய அரசு ரத்துசெய்யவேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்தநிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இந்த போரட்டத்தில் கலந்து கொள்ள விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று திரண்டனர். அங்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு வந்தார் அங்கு அவர் தலைமையில் ஆர்பபாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    Next Story
    ×