என் மலர்

  செய்திகள்

  பணம் பறிமுதல்
  X
  பணம் பறிமுதல்

  பேரணாம்பட்டு அருகே பறக்கும்படை சோதனையில் ரூ.1.67 லட்சம் சிக்கியது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பேரணாம்பட்டு அடுத்த பத்தலபள்ளி சோதனை சாவடி அருகே பறக்கும் படை சோதனையில் ரூ.1.67 லட்சம் சிக்கியது.
  பேரணாம்பட்டு:

  வேலூர் தொகுதி பாராளுமன்ற தேர்தல் ஆகஸ்டு 5-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி பணப்பட்டு வாடாவை தடுக்க பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  பேரணாம்பட்டு அடுத்த பத்தலபள்ளி சோதனை சாவடி அருகே தேர்தல் நிலை கண்காணிப்பு அலுவலர் லோகபிரியன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

  அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 900 இருந்தது தெரியவந்தது. காரை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் நாகை மாவட்டத்தை சேர்ந்த எழிலரசன் என்பதும், கே.ஜி.எப்.பில் உள்ள உறவினருக்கு கொடுப்பதற்காக பணத்தை கொண்டு செல்வதாக கூறினார். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லை.

  இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் பேரணாம்பட்டு தாசில்தார் செண்பகவல்லியிடம் பணத்தை ஒப்படைத்தனர்.
  Next Story
  ×