search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஸ்பெண்டு
    X
    சஸ்பெண்டு

    வேலூர் ஆவின் பொது மேலாளர் சஸ்பெண்டு

    வேலூர் ஆவின் பொது மேலாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக திருவண்ணாலை ஆவின் உதவி பொது மேலாளர் கணேசன் கூடுதலாக ஆவின் பொது மேலாளர் பொறுப்பை கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர், திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் (ஆவின்) சத்துவாச்சாரியில் இயங்கி வருகிறது.

    இங்கு வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

    இந்த பாலில் இருந்து நெய், மோர், ஐஸ்கிரீம், பால்கோவா போன்ற பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பால் சென்னை உள்பட பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    இதன் பொது மேலாளராக கோதண்டராமன் பணியாற்றி வந்தார். இவர் பணியில் சேர்ந்த பின்னர் 2 லட்சம் லிட்டர் பால் முறைகேடு தொடர்பாக 5 அதிகாரிகளை அதிரடியாக சஸ்பெண்டு செய்தார். இந்த நிலையில் நேற்று இவர் திடீரென சஸ்பெண்டு செய்யப்பட்டார். ஆவின் நிறுவன தலைமையகத்தில் இருந்து இதற்கான நகல் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வேலூர் ஆவின் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அவருக்கு பதிலாக திருவண்ணாலை ஆவின் உதவி பொது மேலாளர் கணேசன் கூடுதலாக ஆவின் பொது மேலாளர் பொறுப்பை கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×