search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூரில் பிளாஸ்டிக் பறிமுதல் - வியாபாரிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
    X

    வேலூரில் பிளாஸ்டிக் பறிமுதல் - வியாபாரிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

    வேலூரில் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த மாநகராட்சி அதிகாரிகள் கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
    வேலூர்:

    வேலூரில் பல்வேறு கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி கமி‌ஷனர் சிவசுப்பிரமணியனுக்கு பல்வேறு புகார்கள் வந்தது.

    இதையடுத்து அவரின் உத்தரவின்பேரில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஈஸ்வரப்பன், சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இன்று மண்டிதெரு, லாங்கு பஜார், ரொட்டிக்கார தெரு உள்ளிட்ட இடங்களில் உள்ள கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ரொட்டிக்கார தெருவில் உள்ள பிளாஸ்டிக் மொத்த விற்பனை கடையில் 1 டன் பிளாஸ்டிக் கொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனை பறிமுதல் செய்த மாநகராட்சி அதிகாரிகள் கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    மேலும் அதிகாரிகள் கூறுகையில்:- வேலூரில் தொடர்ந்து கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டால் கடை உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தனர்.
    Next Story
    ×