என் மலர்

  செய்திகள்

  ஓட்டுக்கு பணம் கொடுத்தால்தான் ஜெயிக்க முடியும்- வைரலாகும் ஓ.ராஜா பேச்சு
  X

  ஓட்டுக்கு பணம் கொடுத்தால்தான் ஜெயிக்க முடியும்- வைரலாகும் ஓ.ராஜா பேச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த துரை என்பவருடன் பேசிய ஆடியோ அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #ADMK #ORaja
  தேனி:

  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா தற்போது மதுரை மாவட்ட ஆவின் தலைவராக உள்ளார். இவர் நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த துரை என்பவருடன் பேசிய ஆடியோ அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோ வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பகிரப்பட்டு வருவதால், சர்ச்சை எழுந்துள்ளது.

  தற்போது ஓ.ராஜாவும், நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த துரை என்பவருடன் செல்போனில் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பெரியகுளம் பகுதியில் உள்ள ரேசன் கடைகளில், பொருள்களுக்கு அதிக விலை வைத்து விற்கப்படுவதாகவும், அதற்கு ஓ.ராஜா தான் காரணம் என அறிந்துகொண்டு அதை தட்டிக்கேட்ட துரையிடம் போனில் பேசும் ஓ.ராஜா, “ஏன்டா ரேசன் கடைகளுக்கு சென்று பிரச்சனை செய்கிறாய்?” என கேட்கிறார். “நான் நுகர்வோர் அமைப்பில் இருக்கிறேன். ஒரு கார்டுக்கு 40 ரூபாய் கமிஷன் அடிக்கிறார்கள். அதனால்தான் கேட்டேன்” என்கிறார் துரை.

  “நீ தேவையில்லாத வேலை பார்க்கிறாய். உன் பிழைப்பை மட்டும் பார். எல்லாம் எங்களுக்குத் தெரியும். ஒரு மீட்டிங் போட்டு செலவழிக்க வேண்டும் என்றால் ரூ.1 லட்சம் ஆகும். அதற்கு நீயா செலவு செய்வாய்? பணம் சேர்க்காமலும் பதவி இல்லாமலும் காரில் போக முடியுமா? ஓட்டுக்கு ரூ.500 வரை பணம் கொடுத்தால்தான் ஜெயிக்க முடியும். அது போன்ற எங்களுக்கு யார் என்ன செய்கிறார்கள்? என்று தெரியாதா? தேவையில்லாமல் ரேசன் கடைகளில் பிரச்சனை செய்து உன் வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளாதே என்று மிரட்டுகிறார். இந்த ஆடியோ வெளியாகி கடும் விமர்சனத்தைச் சந்தித்துள்ளது. #ADMK #ORaja
  Next Story
  ×