என் மலர்

  செய்திகள்

  வத்தலக்குண்டுவில் காதல் திருமணம் செய்த பெண் டாக்டர் தற்கொலை
  X

  வத்தலக்குண்டுவில் காதல் திருமணம் செய்த பெண் டாக்டர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வத்தலக்குண்டுவில் காதல் திருமணம் செய்த பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்டார்.

  வத்தலக்குண்டு:

  வத்தலக்குண்டு அருகில் உள்ள கட்டகாமன்பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணி மகன் பாலசந்தர். இவர் சென்னையில் வக்கீலுக்கு படித்து வந்தார். பண்ணைக்காடு பகுதியை சேர்ந்த சக்திவடிவேல் முருகன் மகள் தனுஷ்பிரியா (வயது26).

  இவர் சென்னையில் பல் டாக்டருக்கு படித்து வந்தார்.கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து காதலர்கள் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டனர்.

  வத்தலக்குண்டு காந்திநகர் கம்பர் தெருவில் தனியாக வசித்துவந்தனர். இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. நேற்று இரவு தனுஷ்பிரியா தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இது குறித்து அவரது தந்தை சக்திவடிவேல் முருகன் போலீசில் அளித்துள்ள புகார் மனுவில், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். திண்டுக்கல் ஆர்.டி.ஓ. ஜீவா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

  Next Story
  ×