search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரீட்சை விடுமுறையில் படிக்க வற்புறுத்தல் - பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
    X

    பரீட்சை விடுமுறையில் படிக்க வற்புறுத்தல் - பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

    பரீட்சை விடுமுறையில் படிக்க வற்புறுத்தியதால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    மதுரை:

    மதுரை கப்பலூர் மில் காலனியை சேர்ந்த முருகா னந்தம் மகள் இளைய ராணி (வயது17). இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 முடித்து விட்டு பரீட்சை விடுமுறை என்பதால் வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தார்.

    அப்போது இளைய ராணியின் தாய் பிளஸ்-2 படிப்பு என்பது அரசு பரீட்சை. எனவே 12-ம் வகுப்பு புத்தகங்களை இப்போது முதலே படிக்க தொடங்கு என்று கட்டாயப்படுத்தியுள்ளார்.

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த இளைய ராணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் அங்கன்குளத்தைச் சேர்ந்த வர் கார்த்திக் (27). இவர் மதுரையில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.ஏ. இறுதியாண்டு படித்து வந்தார்.

    இவருக்கு நீண்ட நாட்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்தது. இதற்காக அவர் பல இடங்களில் மருத்துவம் பார்த்தார். ஆனாலும் நோய் குணமாகவில்லை.

    இந்த நிலையில் கார்த்திக் சம்பவத்தன்று ஒத்தக்கடை காந்தி நகரில் இருக்கும் நண்பர் வீட்டுக்கு சென்றார். அங்கு நள்ளிரவில் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

    இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கார்த்திக் பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×