என் மலர்

  செய்திகள்

  8 வழிச்சாலை தீர்ப்பு: மேல்முறையீடு வேண்டாம் என தமிழக அரசை வலியுறுத்துவோம்- அன்புமணி
  X

  8 வழிச்சாலை தீர்ப்பு: மேல்முறையீடு வேண்டாம் என தமிழக அரசை வலியுறுத்துவோம்- அன்புமணி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை-சேலம் 8 வழிச்சாலை குறித்து ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று தமிழக அரசை வலியுறுத்துவோம் என அன்புமணி கூறியுள்ளார். #anbumani #chennaisalemexpressway #tngovt
  தர்மபுரி:

  சென்னை-சேலம் 8 வழிச்சாலை குறித்து இன்று சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பு குறித்து பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

  சென்னை-சேலம் 8 வழிச்சாலை வேண்டாம் என்று எங்கள் தேர்தல் அறிக்கையிலேயே கூறி இருக்கின்றோம். கூட்டணி சேர்ந்தோம் என்பதற்காக எங்களது கொள்கைகளை விட்டுவிட முடியாது. சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை நாங்கள் முழுமையாக வரவேற்கின்றோம்.

  இன்னும் அரசாங்கத்திடம் வலியுறுத்தி இதை விட்டுவிடுங்கள்; இதற்கு மேல்முறையீடு செய்ய தேவையில்லை என்று வலியுறுத்தி நிச்சயம் அழுத்தம் கொடுப்போம். தேர்தலுக்கும், 8 வழிச்சாலைக்கும் சம்பந்தம் கிடையாது. இது என் கடமை. விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுவது என் உரிமை. 

  இவ்வாறு அவர் கூறினார். #anbumani #chennaisalemexpressway #tngovt
  Next Story
  ×