என் மலர்

    செய்திகள்

    சங்கரன்கோவில் அருகே திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை
    X

    சங்கரன்கோவில் அருகே திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சங்கரன்கோவில் அருகே திருமண ஏக்கத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலை அடுத்த கே.வி.நல்லூர் அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது27). கூலித்தொழிலாளி. இவருக்கு கடந்த 2 ஆண்டாக திருமணத்திற்கு பெண் பார்த்து வந்தனர். ஆனால் பெண் கிடைக்கவில்லையாம். இதனால் முருகன் விரக்தி அடைந்தார்.

    இந்த நிலையில் நேற்று அங்குள்ள பம்புசெட் பகுதிக்கு சென்ற அவர் அங்கு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதுபற்றி கே.வி.நல்லூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முருகன் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். 
    Next Story
    ×