என் மலர்

    செய்திகள்

    போடியில் வீட்டில் கஞ்சா பதுக்கி விற்ற தம்பதி கைது
    X

    போடியில் வீட்டில் கஞ்சா பதுக்கி விற்ற தம்பதி கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    போடியில் வீட்டில் கஞ்சா பதுக்கி விற்ற தம்பதியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் மணல் கடத்தல் மற்றும் கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள், மாணவர்களை குறிவைத்து வியாபாரிகள் கஞ்சாவை விற்பனை செய்து வருகின்றனர்.

    கஞ்சா கும்பலை போலீசார் கைது செய்தாலும் தொடர்ந்து விற்பனை அதிகரித்து உள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு போடி டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கீழத்தெரு பகுதியில் உள்ள வீட்டில் கஞ்சா பதுக்கி விற்பதாக போலீசாருக்கு தகவல் எட்டியது. போலீசார் அந்த வீட்டில் சோதனை போட்டனர். அப்போது அங்கு 2 கிலோ கஞ்சா பதுக்கி இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர்.

    வீட்டில் இருந்த முருகேசன், அவரது மனைவி சரசு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் தொடர்ந்து அந்த பகுதியில் கஞ்சா பதுக்கி விற்று வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

    Next Story
    ×