என் மலர்

  செய்திகள்

  மக்கள் மத்தியில் விவாதிக்க தயாரா?- நாராயணசாமிக்கு கிரண்பேடி சவால்
  X

  மக்கள் மத்தியில் விவாதிக்க தயாரா?- நாராயணசாமிக்கு கிரண்பேடி சவால்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுவையில் தற்போது நிலவிவரும் பிரச்சனைகள் தொடர்பாக நாராயணசாமியுடன் பொதுமக்கள் மன்றத்தில் விவாதிக்க தயாராக உள்ளதாக கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். #Narayanasamy #Kiranbedi
  புதுச்சேரி:

  சமூக வலைதளத்தில் கவர்னர் கிரண்பேடி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

  புதுவையை சுத்தமாகவும், பாதுகாப்பாகவும், பசுமையாகவும் வைத்திருக்க கடந்த 2½ வருடங்களாக கவர்னர் மாளிகை முயற்சி எடுத்து பணிகளை செய்து வருகிறது. கண்டிப்பான நடவடிக்கைகளால் கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லாத நிலையை ஏற்படுத்தி உள்ளோம்.

  அனைத்து நிதியையும் சரியான ஏழைகள் பயன்பெற வழி ஏற்படுத்தினோம். அதை மாற்று பணிகளுக்கு அனுமதிக்கவில்லை. தலைமை செயலாளர், நிதித்துறை செயலாளர், நிதித்துறை செயலாளரின் ஆதரவுடன் இவற்றை செய்ய பணம் ஒதுக்கப்படாததற்கு நிதியை எப்படி செலவிட முடியும்?

  நீர் நிலைகள், வாய்க்கால்களை தூர்வார நன்கொடை பெற்று செய்தோம். இதன் மூலம் வெள்ளம் மற்றும் ஏழைகளின் இழப்புகள் தவிர்க்கப்பட்டன. 216 கன ஆய்வுகளை மேற்கொண்டு மக்கள் தேவைகளை அறிந்து தீர்த்து வைத்தோம்.

  நீண்ட நாட்களுக்கு பிறகு முறையான நிதி நிர்வாகத்தின் காரணமாக சுற்றுலா வாரியத்தில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி ரூ.1 கோடியை பெற முடிந்தது. நிதி விதிமுறைகளை மீறி மானியங்களை வழங்கவில்லை. இது முதல்- அமைச்சரை மிகவும் தொந்தரவுக்குள்ளாக்கியது.  சாலை பாதுகாப்பு விதிகளை கடைப்பிக்காததால் உயிரிழிப்புகள் ஏற்படுகின்றன. சாதாரண மனிதனின் உழைப்பு தான் அந்த குடும்பத்தையே காப்பாற்றுகிறது. அதற்காக ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி அதை அமல்படுத்துவதை தீவிரமாக்கினோம்.

  போராட்டத்தையொட்டி கவர்னர் மாளிகையை சுற்றி சாலைகள் அடைக்கப்பட்டுள்ளதற்கும், சாவு மணி அடிக்கப்படுவதால் அந்த பகுதியில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதற்கும் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

  தற்போது எழுந்துள்ள பிரச்சனைகள் தொடர்பாக முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுடன் நான் பொதுமக்கள் மன்றத்தில் விவாதிக்க தயாராக உள்ளேன். குறிப்பாக ஏழைகளுக்கான அரிசு, ரோடியர், சுதேசி மில், சர்க்கரை ஆலை மற்றும் உள்ளவை பற்றி விவாதிக்கலாம்.

  இவ்வாறு கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். #Narayanasamy #Kiranbedi
  Next Story
  ×