என் மலர்
செய்திகள்

திருவலம் அருகே மரத்தில் கார் மோதி கல்லூரி மாணவர் பலி
திருவலம் அருகே மரத்தில் கார் மோதி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:
ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் நமல் பார்த்தி (வயது 20). இவர் காட்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் தங்கி பி.டெக். 3-ஆண்டு படித்து வந்தார்.
இவர் நேற்று மாலை தனது நண்பர்களுடன் காரில் திருவலத்தில் இருந்து காட்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
சேவூர் என்ற இடத்தில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் கார் மோதியது. இதில் நமல்பார்த்தி படுகாயமடைந்தார்.
அவரை மீட்ட நண்பர்கள் வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நமல்பார்த்தி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து திருவலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story