search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் அதிகாலையில் மதுக்கடையை திறந்து விற்பனை- பொதுமக்கள் எதிர்ப்பு
    X

    தஞ்சையில் அதிகாலையில் மதுக்கடையை திறந்து விற்பனை- பொதுமக்கள் எதிர்ப்பு

    தஞ்சையில் அதிகாலையில் மதுக்கடையை திறந்து கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் பாலாஜி நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் அரசு மதுபான கடை ஒன்று உள்ளது. இந்தக்கடை சாலையோரமாக, குடியிருப்பு பகுதிகளின் அருகாமையில் செயல்பட்டு வருகிறது.

    நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த கடை அடைக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று மதியம் 12 மணிக்கு திறக்கப்பட வேண்டிய மதுக்கடை காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த கடையில் தினமும் காலையில் உள்ளே சிலர் செல்வதும், வெளியே வருவதுமாக இருந்தனர்.இதைப் பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் . அந்த வழியாக நடந்து செல்லவே பெண்கள் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது,

    இந்த மதுக்கடையில் தொடர்ந்து கள்ளத்தனமாக மது விற்கப்படுகிறது. இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும். அதிகாலை நேரத்தில் கள்ளத்தனமாக மது விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×