என் மலர்

  செய்திகள்

  தாராபுரம் அருகே காதல் தோல்வியால் விரக்தி- வாலிபர் தற்கொலை
  X

  தாராபுரம் அருகே காதல் தோல்வியால் விரக்தி- வாலிபர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தாராபுரம் அருகே காதல் தோல்வியால் மனமுடைந்த வாலிபர் பெட்ரோல் ஊற்றி தீ குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

  தாராபுரம்:

  திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பஞ்சப்பட்டி அருகே உள்ளது சின்னக்கரை ஓடை. இன்று காலை அந்த வழியே சென்றவர்கள் வாலிபர் ஒருவர் எரிந்து கருகிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

  இது குறித்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். எரிந்து கிடந்த வாலிபர் உடல் அருகே ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 2 லிட்டர் பெட்ரோல் இருந்தது.

  மோட்டார் சைக்கிளின் டேங்க் கவரை பிரித்து பார்த்தபோது அதில் செல்போன், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தன. போனில் உள்ள எண்ணை வைத்து தொடர்பு கொண்டபோது இறந்து கிடப்பது பவானி மெயின் ரோடு ஈரோட்டை சேர்ந்த பழனிசாமி என்பவரது மகன் செல்வக்குமார் (வயது 21) என்பது தெரியவந்தது.

  இது குறித்து செல்வக்குமாரின் அண்ணன் போலீசாரிடம் கூறும்போது, எனது தம்பி பிளஸ்-2 முடித்து விட்டு வாட்டர் பில்டர் மெக்கானிக் வேலை செய்து வந்தார். இதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்தார். கடந்த சில நாட்களாக அவர் சோகமாக காணப்பட்டார்.

  இது குறித்து விசாரித்தபோது அவர் காதல்தோல்வி அடைந்து விட்டதாக தெரியவந்தது. இதனால் அவர் சாப்பிடாமலும், தூங்காமலும் விரக்தியுடன் காணப்பட்டார். நாங்கள் அவரை சமாதானப் படுத்தினோம். இருந்தாலும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு செல்வக்குமார் மாயமானார். அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர், நண்பர் வீடுகளில் தேடினோம்.

  இந்நிலையில் அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

  இது குறித்து போலீசார் கூறும்போது வீட்டை விட்டு வெளியேறிய செல்வக்குமார் இந்த பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். வரும்போது 4 லிட்டர் பெட்ரோல் வாங்கி வந்து அதில் 2 லிட்டர் பெட்ரோலை உடலை ஊற்றி தீ குளித்து தற்கொலை செய்துள்ளார் என்று கூறினர்.

  தடயவியல் நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்த தடயங்களை சேகரித்த பின்னர் வாலிபரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படும். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.

  செல்வக்குமார் சாவுக்கு வேறு ஏதும் காரணம் இருக்கமா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றனர்.

  Next Story
  ×