என் மலர்

    செய்திகள்

    நகை, பணம் இல்லாததால் ரெயில்வே ஊழியர் வீட்டுக்கு தீ வைத்த கொள்ளை கும்பல்
    X

    நகை, பணம் இல்லாததால் ரெயில்வே ஊழியர் வீட்டுக்கு தீ வைத்த கொள்ளை கும்பல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    புட்லூரில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளை கும்பலுக்கு நகை-பணம் சிக்காததால் ஆத்திரத்தில் வீட்டை தீ வைத்து எரித்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த புட்லூர் உல்லாசம் நகரைச் சேர்ந்தவர் பிரபாகர். சென்னை ரெயில்வேயில் சட்டப்பிரிவில் பணியாற்றி வருகிறார்.

    நேற்று காலை அவர் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். அவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு வில்லிவாக்கத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    மாலையில் பிரபாகர் திரும்பி வந்தபோது வீட்டு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ஆவணங்கள் கிழித்து வீசப்பட்டு கிடந்தன.



    மேலும் பொருட்களை குவித்து வைத்து வீட்டுக்கு தீ வைத்து எரித்து இருந்தனர். தீ பெரிய அளவில் பிடிக்காமல் உடனடியாக அணைந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    வீட்டுக்குள் புகுந்த கொள்ளை கும்பலுக்கு நகை-பணம் சிக்காததால் ஆத்திரத்தில் வீட்டை தீ வைத்து எரித்து உள்ளனர்.

    இதையடுத்து அறையில் இருந்த டி.வி., 2 லேப்-டாப் மற்றும் மோட்டார்சைக்கிளை திருடி மர்ம கும்பல் தப்பி இருப்பது தெரிய வந்தது.

    வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம கும்பல் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே இதில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.

    இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரெயில்வே ஊழியர் வீட்டுக்கு கொள்ளை கும்பல் தீ வைத்த சம்பவம் புட்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    Next Story
    ×