என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேகதாதுவில் அணை கட்டுவதை பா.ஜனதா ஏற்றுக் கொள்ளாது- தமிழிசை பேட்டி
    X

    மேகதாதுவில் அணை கட்டுவதை பா.ஜனதா ஏற்றுக் கொள்ளாது- தமிழிசை பேட்டி

    மேகதாதுவில் அணை கட்டுவதை தமிழக பாரதீய ஜனதா ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது. எங்களது எதிர்ப்பை தெரிவிப்போம் என்று தமிழிசை தெரிவித்துள்ளார். #tamilisai #bjp #mekedatu

    கோவை:

    பாரதீய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு பல்வேறு உதவிகளைக் செய்து வருகிறது. மத்திய மந்திரி நிர்மலா சீத்தாரமன் மூலமாக, என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறதோ அதற்கு தீர்வு காண்பதற்கு அத்தனை முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்.

    டெல்டா பகுதிகளில் நடக்கும் மீட்பு பணிகளில் மத்திய அரசின் பங்குள்ளது, ஆனால் இன்னும் எந்த நடவடிக்கைகயும் எடுக்க வில்லை என எதிர்கட்சிகள் அவநம்பிக்கையோடு பேசி வருகின்றன.

    மத்திய அரசிடம் வீடு கட்டி தருவது, சாலைகள் அமைப்பது, பயிர் கடன்களைக்ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைக் நிதி அமைச்சகத்திடம் நாங்கள் எடுத்துரைத்துள்ளோம். ஆனால் சில கட்சிகள் இங்கு அரசியல் செய்து கொண்டு இருக்கின்றன.

    மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கொடுக்கப்பட வில்லை. ஆய்வு செய்ய மட்டும் தான் மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. மேகதாதுவில் அணை கட்டுவதை தமிழக பாரதீய ஜனதா ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது. எங்களது எதிர்ப்பை தெரிவிப்போம்.

    தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்ட முடியாது. தமிழக அரசும் அனுமதிக்காது. வேண்டு மென்றே மேகதாது விவாகரம் தொடர்பாக எதிர்கட்சிகள் நடத்தும் ஆர்பாட்டம் கண் துடைப்பு நாடகம் ஆகும்.

    அருகில் உள்ள மாவட்டங்கள் கண்ணீரில் இருக்கும் போது கண்ணீரைக் துடைக்க வேண்டிய காலகட்டத்தில் கண்துடைப்பு நாடகத்தைக் நடத்துகிறார்கள். தமிழக அரசின் சட்ட நடவடிக்கைக்கு தமிழக பாரதீய ஜனதா தனது முழுமையான ஆதரவைக் தரும்.

    சிலை கடத்தல் விவகாரத்தில் பொன்.மானிக்கவேலை மீண்டும் விசாரணை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது, நியாயத்திற்க்கு கிடைத்த தீர்ப்பாகவே நாங்கள் பார்க்கிறோம். 

    இவ்வாறு அவர் கூறினார். #tamilisai #bjp #mekedatu 

    Next Story
    ×