search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சியில் டிசம்பர் 4-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம்- அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு முக ஸ்டாலின் அறிவிப்பு
    X

    திருச்சியில் டிசம்பர் 4-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம்- அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு முக ஸ்டாலின் அறிவிப்பு

    மேகதாது அணை தொடர்பாக திருச்சியில் டிசம்பர் 4-ந்தேதி திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். #MekedatuDam #DMK #MKStalin
    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த அனைத்து கட்சி கூட்டம் 24 மணி நேரத்துக்குள் கூட்டப்பட்ட கூட்டம். ஏற்கனவே ஒத்த கருத்துடைய கட்சிகளை அணுகி இந்த கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கலந்து பேசிய நேரத்தில் உடனடியாக இந்த கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது.

    மற்ற கட்சிகளை ஏன் அழைக்கவில்லை? என்ற ஒரு கேள்வியும் எழுப்பப்பட்டிருக்கிறது.

    எனவே மற்ற கட்சிகளை எல்லாம் அழைக்க கூடிய அளவுக்கு நேரம் இல்லாத காரணத்தால் நாங்கள் அழைக்க முடியாத நிலை ஏற்பட்டது. நாங்கள் ஏற்கனவே ஒருங்கிணைந்து பல்வேறு நிலைகளில் ஒன்று சேர்ந்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி கொண்டிருக்க கூடிய கட்சிகளோடு சேர்ந்து இந்த கூட்டத்தை கூட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.

    இந்த கூட்டத்தின் துவக்கத்தில், அண்மையில் கஜா புயலினால் உயிரிழந்த தோழர்களுக்கு, விவசாயிகளுக்கு, அஞ்சலி செலுத்தக் கூடிய வகையில் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று எங்களுடைய அஞ்சலியை செலுத்தி உள்ளோம்.


    இந்த கூட்டத்தின் தீர்மானமாக, மேகதாது விசயத்தில் உடனடியாக தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை மாநில அரசு கூட்டி, ஒரு சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு உடனே அனுப்பி, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த அடிப்படையில் வருகிற டிசம்பர் 4-ந்தேதி திருச்சியில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்க கூடிய வகையில் ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக்கிறோம்.

    நியாயமாக இந்த ஆர்ப்பாட்டத்தை டெல்டா பகுதியில்தான் நடத்தி இருக்க வேண்டும். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் தெரியும்.

    எனவேதான் திருச்சியில் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி பேதங்களை மறந்து கட்சிக்கு அப்பாற்பட்டு அனைவரும் பங்கேற்க வேண்டும்.

    டெல்டா பகுதியில் உள்ள மக்களும் விவசாயிகளும் இதில் பங்கேற்க உள்ளனர். முதற்கட்டமாக இந்த ஆர்ப்பாட்டத்தை அறிவித்து உள்ளோம். அனைத்து கட்சி தலைவர்களும் அதில் பங்கேற்க இருக்கிறார்கள்.

    கே:- சிறிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படுமா?

    ப:- அரசியலுக்கு அப்பாற்பட்டு யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். இப்போது உங்கள் மூலமாகவும் மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

    கே:- பாரதிய ஜனதா கட்சி, அ.ம.மு.க. போன்ற கட்சிக்கு அழைப்பு விடுப்பீர்களா?

    ப:- வந்தால் வரவேற்கிறோம்.

    (வைகோ குறுக்கிட்டு) மேகதாது விஷயத்தில் கேடு செய்ததே பாரதிய ஜனதா அரசுதான். அவர்களை எப்படி அழைப்பது? என்றார்.   #MekedatuDam #DMK #MKStalin
    Next Story
    ×