என் மலர்
செய்திகள்

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு தொழிலாளி பலி
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக் காய்ச்சலுக்கு தொழிலாளி பலியானார். #Swineflu #Dengue
மதுரை:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டியைச் சேர்ந்தவர் பழனி (வயது 54). தொழிலாளி. சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பழனியை அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் காய்ச்சல் குணமாகவில்லை. எனவே மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் பழனிக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதியானது. தனி வார்டில் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த பழனி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 4 குழந்தைகள் உள்பட 21 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 115 பேரும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Next Story