என் மலர்
செய்திகள்

சர்கார் படத்தில் அரசியல் விமர்சனம்- அதிமுக கடும் எதிர்ப்பு
சர்கார் பட காட்சிகளுக்கு அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ, கே.பி.அன்பழகன், ஜெயக்குமார் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். #ADMK #Sarkar #Vijay
சென்னை:
நடிகர் விஜயின் சமீபகால படங்களில் பெரும்பாலானவை சர்ச்சையில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘தலைவா’ பட டைட்டிலின் கீழ் ‘டைம் டூ லீடு’ (தலைமை ஏற்கும் நேரம்) என்கிற வார்த்தைகளுக்கு அரசியல் பின்னணியில் இருந்து கடும் எதிர்ப்புகள் சத்தமில்லாமல் எழுந்தது. பின்னர் அந்த வார்த்தைகள் நீக்கப்பட்ட பின்னரே தலைவா படம் வெளியானது.
கத்தி படத்தில் 2ஜி அலைக்கற்றை ஊழல் குறித்தும், மெர்சல் படத்தில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கிண்டல் செய்தும் விஜய் பேசிய வசனங்கள் தீப்பொறியை கிளப்பின. மெர்சல் படத்தில் இடம் பெற்ற சில காட்சிகளுக்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

சர்கார் படத்தில் பழ.கருப்பையா முதல்- அமைச்சராக வருகிறார். அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் போல ராதா ரவியின் கதாபாத்திரம் அமைச்சராக சித்தரிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரிடமும் விஜய் காரசாரமாக அரசியல் வசனம் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தமிழக அரசின் மின்சார துறை, போக்குவரத்து துறை, பொதுப்பணி துறை ஆகியவற்றை சரமாரியாக விமர்சிக்கும் வகையிலும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தமிழக அரசின் இலவச பொருட்களை தீயில் போட்டு கொளுத்தும் காட்சியும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவுவதற்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் அரசு மெத்தனம் காட்டியதே காரணம் என்றும் படத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தமிழக அரசின் துறைகளில் இருப்பவர்கள் ஏதாவது அசம்பாவித சம்பவம் நடந்த பின்னரே விழித்துக் கொள்வது போலவும் விஜய் பேசும் வசனங்கள் இடம் பெற்றுள்ளன.
அரசு பஸ் மோதி ஒருவரின் கால்கள் துண்டாவது போன்ற காட்சியில், அனுபவம் இல்லாத டிரைவரை வைத்து பஸ் ஓட்டியதே காரணமாக கூறப்பட்டுள்ளது. மின்சாரம் தாக்கும் குழந்தையை காப்பாற்றப் போகும் வாலிபர் பலியாவது போன்ற காட்சியில் மின்சார துறையை சாடியுள்ளனர்.
‘சர்கார்’ படத்தில் துணிச்சலாக பல்வேறு அரசியல் கட்சிகளைச் சாடியிருக்கிறார் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ். தனது ஓட்டை கள்ள ஓட்டாக போட்டு விட்டார்கள் என்பதற்காக விஜய் நடத்தும் போராட்டமே படத்தின் கதை.
அரசியல்வாதிகள் எப்படி மக்களைப் பார்க்கிறார்கள் என்பதை ராதா ரவி கதாபாத்திரம் மூலம் வெளிப்படுத்தி உள்ளனர்.
அரசியல் மாநாடு காட்சியில் அரசியல்வாதியான பழ.கருப்பையாவிடம் விஜய் பேசும் காட்சிக்கு திரையரங்குகளில் வரவேற்பு அதிகம். நியூட்ரினோ திட்டம், மீனவர்கள் பிரச்சனை, ஹைட்ரோ கார்பன் பிரச்சனை என அனைத்தையும் சரி செய்ய வாக்குறுதியளிக்க வேண்டும் என்று பழ.கருப்பையாவிடம் விஜய் கேட்பார்.

கந்து வட்டியால் நெல்லையில் நடந்த தீக்குளிப்பு சம்பவம், கண்டெய்னர் பணம் ஆகியவையும் திரைக்கதையில் சரியான இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

அதே போல் ‘சர்கார்’ படத்தில் வரலட்சுமியின் பெயர் கோமளவல்லி. இதில் ஒரு பின்னணி இருக்கிறது. மறைந்த தமிழக முதலவர் ஜெயலலிதாவின் இளம் வயது பெயர் கோமளவல்லி என்று அ.தி.மு.க.வினர் சொல்கிறார்கள்.
இலவசங்கள் கொடுத்து சீரழிக்கிறார்கள் என்ற காட்சியில் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இலவச மிக்ஸியை எடுத்து தீயில் வீசுவார். படத்தின் முதல் பாதியில் மக்களுக்கு என்ன திட்டங்கள் அறிவித்தாலும், இலவசங்கள் கொடுத்தாலும் அதில் என் தலைவனின் புகைப்படத்தை ஒட்டி ஒட்டி அனைத்து மக்களின் மூளையிலும் என் தலைவன் முகத்தை கொண்டு போய் பிராண்ட் பண்ணியிருக்கேன்டா என்ற வசனம் பேசுவார் ராதாரவி. அதெல்லாம் இனி எடுபடாது என்பார் விஜய்.
விஜய் எதற்காக அரசியலுக்கு வருகிறார் என்பதை படம் உணர்த்துகிறது. இதன் மூலம் அவரது அரசியல் பிரவேசம் விரைவில் இருக்கும் என்பதும் உணர்த்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற சர்கார் பட காட்சிகளுக்கு அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ, கே.பி.அன்பழகன், ஜெயக்குமார் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் வழக்கு தொடருவோம் என்று அ.தி.மு.க.வினர் அறிவித்து உள்ளனர். #ADMK #Sarkar #Vijay
நடிகர் விஜயின் சமீபகால படங்களில் பெரும்பாலானவை சர்ச்சையில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘தலைவா’ பட டைட்டிலின் கீழ் ‘டைம் டூ லீடு’ (தலைமை ஏற்கும் நேரம்) என்கிற வார்த்தைகளுக்கு அரசியல் பின்னணியில் இருந்து கடும் எதிர்ப்புகள் சத்தமில்லாமல் எழுந்தது. பின்னர் அந்த வார்த்தைகள் நீக்கப்பட்ட பின்னரே தலைவா படம் வெளியானது.
கத்தி படத்தில் 2ஜி அலைக்கற்றை ஊழல் குறித்தும், மெர்சல் படத்தில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கிண்டல் செய்தும் விஜய் பேசிய வசனங்கள் தீப்பொறியை கிளப்பின. மெர்சல் படத்தில் இடம் பெற்ற சில காட்சிகளுக்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் படத்திலும் சர்ச்சைக்குரிய வகையில் அரசியல் வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

இவர்கள் இருவரிடமும் விஜய் காரசாரமாக அரசியல் வசனம் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தமிழக அரசின் மின்சார துறை, போக்குவரத்து துறை, பொதுப்பணி துறை ஆகியவற்றை சரமாரியாக விமர்சிக்கும் வகையிலும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தமிழக அரசின் இலவச பொருட்களை தீயில் போட்டு கொளுத்தும் காட்சியும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவுவதற்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் அரசு மெத்தனம் காட்டியதே காரணம் என்றும் படத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தமிழக அரசின் துறைகளில் இருப்பவர்கள் ஏதாவது அசம்பாவித சம்பவம் நடந்த பின்னரே விழித்துக் கொள்வது போலவும் விஜய் பேசும் வசனங்கள் இடம் பெற்றுள்ளன.
அரசு பஸ் மோதி ஒருவரின் கால்கள் துண்டாவது போன்ற காட்சியில், அனுபவம் இல்லாத டிரைவரை வைத்து பஸ் ஓட்டியதே காரணமாக கூறப்பட்டுள்ளது. மின்சாரம் தாக்கும் குழந்தையை காப்பாற்றப் போகும் வாலிபர் பலியாவது போன்ற காட்சியில் மின்சார துறையை சாடியுள்ளனர்.
‘சர்கார்’ படத்தில் துணிச்சலாக பல்வேறு அரசியல் கட்சிகளைச் சாடியிருக்கிறார் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ். தனது ஓட்டை கள்ள ஓட்டாக போட்டு விட்டார்கள் என்பதற்காக விஜய் நடத்தும் போராட்டமே படத்தின் கதை.
அரசியல்வாதிகள் எப்படி மக்களைப் பார்க்கிறார்கள் என்பதை ராதா ரவி கதாபாத்திரம் மூலம் வெளிப்படுத்தி உள்ளனர்.
அரசியல் மாநாடு காட்சியில் அரசியல்வாதியான பழ.கருப்பையாவிடம் விஜய் பேசும் காட்சிக்கு திரையரங்குகளில் வரவேற்பு அதிகம். நியூட்ரினோ திட்டம், மீனவர்கள் பிரச்சனை, ஹைட்ரோ கார்பன் பிரச்சனை என அனைத்தையும் சரி செய்ய வாக்குறுதியளிக்க வேண்டும் என்று பழ.கருப்பையாவிடம் விஜய் கேட்பார்.
அதற்கு “இதெல்லாம் வைச்சு தான் எங்களுக்குப் பணமே வருது. அதுலயே கை வைச்சா” என்று நீண்ட வசனம் பேசுவார் பழ.கருப்பையா. அதுதற்கால அரசியலை அப்படியே படம் பிடிப்பதாக உள்ளது.

Next Story