search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    மது குடிக்க மனைவி பணம் தராததால் தொழிலாளி தற்கொலை
    X

    மது குடிக்க மனைவி பணம் தராததால் தொழிலாளி தற்கொலை

    பண்ருட்டி அருகே மது குடிக்க மனைவி பணம் தராததால் மனவேதனை அடைந்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஆற்றங்கரை ஆண்டிகுப்பம் பகுதியை சேர்ர்தவர் பழனிசாமி (வயது53). கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி(46).

    பழனிசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. அவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டில் மனைவி செல்வியிடம் தகராறு செய்து வந்தார்.

    நேற்று அவர் மதுகுடிக்க மனைவியிடம் பணம் கேட்டார். அப்போது செல்வி பணம் கொடுக்க மறுத்தார். இதனால் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் பழனிச்சாமி மனவேதனை அடைந்தார். பின்னர் அவர் வீட்டில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் குமரய்யா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
    Next Story
    ×