search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்திரையர்பாளையத்தில் கூலித்தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
    X

    முத்திரையர்பாளையத்தில் கூலித்தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    முத்திரையர் பாளையத்தில் மனைவி கோபித்து சென்றதால் கூலித் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவை முத்திரையர்பாளையம் கோவிந்தன்பேட் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 36). கூலித் தொழிலாளி.

    இவருக்கு நிரோஷா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மது குடிக்கும் பழக்கம் உள்ள விஜயன் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம்.

    அதுபோல் நேற்று இரவு விஜயன் மதுகுடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்தார். இதனால் கணவனிடம் கோபித்து கொண்டு நிரோஷா குழந்தைகளை அழைத்து கொண்டு பக்கத்து வீட்டுக்கு சென்று தங்கினார்.

    மனைவி கோபித்து சென்றதால் மனவேதனை அடைந்த விஜயன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் மின் விசிறி கொக்கியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கினார். சிறிது நேரம் கழித்து கணவர் தூங்கி இருப்பார் என கருதி நிரோஷா வீட்டுக்கு வந்தார். அப்போது கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இனியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×