என் மலர்
செய்திகள்

திருவண்ணாமலையில் தந்தை, மகன் மீது தாக்குதல்- 6 பேர் கும்பல் கைது
திருவண்ணாமலையில் மருகளை கிண்டல் செய்தவர்களை தட்டி கேட்ட மாமனார் மற்றும் கணவரை தாக்கிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை காந்திநகர் 4-வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவரது மகன் சுரேஷ் (29). பெயிண்டர். இவருடைய மனைவி தாமரைச்செல்வி (25).
நேற்று மாலை மாமனார் ஆறுமுகத்துடன் தாமரைச் செல்வி மாட்டிற்கு பசுந்தீவன புல் அறுத்து தூக்கி கொண்டு வந்தார். அப்போது, 6 பேர் கொண்ட கும்பல் தாமரைச் செல்வியை ஆபாசமாக பேசி கேலி-கிண்டல் செய்தனர்.
ஆத்திரமடைந்த ஆறுமுகம் மருமகளை கிண்டல் செய்த கும்பலை தட்டிக்கேட்டார். அந்த கும்பல், ஆறுமுகத்தை உருட்டுக்கட்டையால் தாக்கி அடித்து உதைத்தனர்.
தந்தை தாக்கப்படுவதை அறிந்து ஓடி வந்த சுரேஷையும் அந்த கும்பல் பயங்கரமாக தாக்கியது. இதில் ஆறுமுகமும், சுரேஷூம் பலத்தகாயமடைந்தனர்.
சிகிச்சைக்காக 2 பேரும் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் அளித்தனர்.
வழக்குப்பதிந்த போலீசார், தந்தை-மகனை தாக்கிய வினோத் (20), நவ அரசு (20), பார்த்திபன் (30), விக்னேஷ் (17), சந்திரகுமார் (21), அருண்குமார் (20) ஆகிய 6 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews

Next Story