என் மலர்

  செய்திகள்

  அ.தி.மு.க.வில் புதிதாக 8 அமைப்பு செயலாளர்கள்
  X

  அ.தி.மு.க.வில் புதிதாக 8 அமைப்பு செயலாளர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட அ.தி.மு.க.வில் புதிதாக 8 அமைப்பு செயலாளர்களை நியமித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். #ADMK
  சென்னை:

  அ.தி.மு.க.வின் அமைப்பு செயலாளர்களாக முன்னாள் மத்திய மந்திரி என்.செஞ்சி ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்கள் எம்.பரஞ்சோதி, ப.மோகன் மற்றும் முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ., சின்னத்துரை ஆகிய 5 பேர் புதிதாக நியமிக்கப்பட்டு இருந்தனர்.

  இந்த நிலையில் மேலும் 3 பேரை அமைப்பு செயலாளர்களாக நியமித்து அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

  அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ஏ.பாப்பா சுந்தரம், மதுரை புறநகர் மாவட்ட முன்னாள் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முத்துராமலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

  அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கட்சியில் அமைப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே குட்கா ஊழல் தொடர்பாக சமீபத்தில்தான் அவரது வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தி இருந்தது.

  இந்த 3 பேரையும் சேர்த்து அ.தி.மு.க.வில் புதிதாக 8 பேர் அமைப்பு செயலாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

  இதே போல அ.தி.மு.க.வின் சட்ட ஆலோசகராக பி.எச்.பாண்டியன், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராக காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் தலைவர் காஞ்சி பன்னீர் செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். #ADMK
  Next Story
  ×