என் மலர்
செய்திகள்

ஓட்டலில் சாப்பிட்ட போது ரூ.25 லட்சம் பணத்துடன் ஓடிய டிரைவர்
மதுராந்தகம் அருகே ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்த போது ரூ.25 லட்சம் பணத்துடன் ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுராந்தகம்:
காரைக்காலை சேர்ந்தவர் பாலமுருகன். ரியல் எஸ்டேட் அதிபர். இவர் தனது காரில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். காரை டிரைவர் முகமது யூசுப் ஓட்டினார். முதலியார் குப்பம் என்ற இடத்தில் இருவரும் ஓட்டலில் சாப்பிட்டனர். டிரைவர் முகமது யூசுப் முதலில் ஓட்டலை விட்டு வெளியேறி காரில் இருந்த ரூ.25 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு காருடன் தப்பிச் சென்றார்.
கூவத்தூர் என்ற இடத்தில் காரை விட்டு விட்டு பணத்துடன் தலைமறைவாகி விட்டார். இது குறித்து கூவத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. #tamilnews

Next Story