search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரருக்கு ஜிகே வாசன் பாராட்டு
    X

    ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரருக்கு ஜிகே வாசன் பாராட்டு

    ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். GKVasan #DharunAyyasamy #AsianGames2018
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஹரியானா வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றிருப்பதும், தமிழக வீரர் தருண் அய்யாச்சாமி வெள்ளிப்பதக்கம் வென்றிருப்பதும் வாழ்த்துக்குரியது. பாராட்டுக்குரியது.

    தருண் அய்யாச்சாமி 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார். அதுவும் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 49 வினாடிக்கும் குறைவாக ஓடி, தேசிய சாதனையை நிகழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் நமது தமிழக வீரர் தருண் அய்யாச்சாமி என்பது பெரிதும் பாராட்டுக்குரியது.


    உலக அளவில் தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக வெற்றி பெற்றிருப்பதும், சாதனை நிகழ்த்தியிருப்பதும் தமிழர்களுக்கும், இந்திய நாட்டிற்கும் பெருமையாக இருக்கிறது.

    மத்திய மாநில அரசுகள் பதக்கங்கள் பெறும் விளையாட்டு வீரர்களுக்கு மரியாதை செய்வதும், ஊக்கத் தொகை கொடுப்பதும், விருதுகள் வழங்குவதும், பாராட்டுவதும் சாலச்சிறந்தது.

    தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, வெள்ளிப்பதக்கம் வென்ற தருண் அய்யாச்சாமி தொடர்ந்து விளையாட்டில் ஈடுபட்டு உலக அளவில் மென்மேலும் பல்வேறு விருதுகளை பெற்று சிறந்து விளங்கி தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #GKVasan #DharunAyyasamy #AsianGames2018
    Next Story
    ×