என் மலர்
செய்திகள்

கருணாநிதி உடல்நிலை - முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொலைபேசியில் விசாரித்தார்
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். #Karunanidhi #karunanidhiHealth #PranabMukherjee
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி ரத்த அழுத்தம் காரணமாக சமீபத்தில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை மற்றும் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்த அரசியல் தலைவர்கள் கருணாநிதி உடல்நலத்துடன் இருப்பதாக தெரிவித்தனர். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கருணாநிதியை பார்த்தபோது எடுக்கப்பட்ட புகைப்படமும் வெளியிடப்பட்டது.
இதற்கிடையே, நேற்று இரவு கருணாநிதி உடல் நிலையில் திடீரென பின்னடைவு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவரது உடல் நிலை சீரடைந்ததாக மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி திமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். #Karunanidhi #karunanidhiHealth #PranabMukherjee
Next Story