search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேரலையாக சட்டசபை நிகழ்ச்சிகள் - சபாநாயகர் தனபால் உடன் துரைமுருகன் வாக்குவாதம்
    X

    நேரலையாக சட்டசபை நிகழ்ச்சிகள் - சபாநாயகர் தனபால் உடன் துரைமுருகன் வாக்குவாதம்

    சட்டசபை நிகழ்ச்சிகளை நேரலையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது தொடர்பாக சபாநாயகர் தனபாலுக்கும், எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. #TNAssembly
    சென்னை:

    சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசும்போது கூறியதாவது:-

    சட்டசபை நடவடிக்கைகளை நேரில் காணும் வகையில் அதிகாரிகளுக்கு தனியாக தொலைக்காட்சி வசதி செய்யப்பட்டுள்ளது. சபாநாயகர் உத்தரவுப்படி இது நடந்துள்ளது. இதுபோல எதிர்க்கட்சி தலைவர் அறையிலும் அமைச்சர்கள் அறையிலும் தொலைக்காட்சி வசதி செய்து கொடுக்க வேண்டும்.

    சபாநாயகர் தனபால்:- சபையில் அதிகாரிகள் அனைவரும் அமரும் வகையில் இட வசதியில்லை. எனவே அமைச்சர்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு உடனடியாக அவர்கள் பதில் அளிக்கும் விதமாக அதை தயாரித்து தர வேண்டியுள்ளது. எனவேதான் அதிகாரிகளுக்கு மட்டும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    துரைமுருகன்:- இதை அனைவரும் பார்க்கும்படி தொலைக்காட்சியிலேயே ஒளிபரப்ப ஏற்பாடு செய்யலாமே.

    சபாநாயகர்:- அந்த பிரச்சினை நீதிமன்றத்தில் உள்ளது. சபையின் தேவையை கருதி அதிகாரிகளுக்கு மட்டும் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி மேலும் விவாதிக்க வேண்டாம்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.
    Next Story
    ×