என் மலர்
செய்திகள்

திண்டுக்கல் அருகே தனியார் பள்ளி வாகனம் மோதி முதியவர் பலி
திண்டுக்கல் அருகே தனியார் பள்ளி வாகனம் மோதி முதியவர் பலியானார். இது குறித்து எரியோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு போலீஸ் சரகம் குண்டாம்பட்டியை சேர்ந்தவர் ராஜசின்னப்பன் (வயது66) விவசாய கூலித்தொழிலாளி. இவர் இன்று காலையில் எரியோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வடமதுரை கலைமகள் பள்ளி வாகனம் வந்து கொண்டிருந்தது. வேகத்தடையில் வாகனம் ஏறி இறங்கியதில் நிலைதடுமாறி ராஜசின்னப்பன் மீது மோதியது. இதில் அவர் வலது கால் துண்டிக்கப்பட்டு படுகாயம் அடைந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து எரியோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

Next Story