search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளாஸ்டிக் பைகளால் மாசுபடும் கொடைக்கானல்
    X

    பிளாஸ்டிக் பைகளால் மாசுபடும் கொடைக்கானல்

    கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் மக்காத பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதால் மாசுபடுகிறது. இதனை தடுக்க பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெருமாள்மலை:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானல் முக்கிய சுற்றுலாத்தலமாக இருப்பதால் தமிழகம். கேரளம், ஆந்திரா, கர்நாடக மற்றும் வெளிமாநிலங்களிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கி றது.

    கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் மக்காத பிளாஸ்டிக் பைகளை உபயோகித்து முக்கிய சுற்றுலா தளங்களிலும் நகர் பகுதிகளிலும் பிளாஸ்டிக் குப்பைகளை விட்டு செல்லுவதால் வனப்பகுதியில் இருந்து நகர் பகுதிக்கு வரும் வன விலங்குகள் மற்றும் பசு மாடுகள் இந்த பிளாஸ்டிக் குப்பைகளை உண்கிறது.

    இதனால் விலங்குகளும் இறந்து விடுகின்றன மேலும் சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் பாதிப்படைந்து வருகிறது.

    2019-ம் ஆண்டு முதல் தமிழக அரசு பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்க கூடாது என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் சர்வேதேச சுற்றுலாத் தலமான கொடைக் கானலில் பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்க கூடாது என சுமார் 4 வருடத்திற்கு முன்பே மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது

    ஆனால் கொடைக் கானலில் ஓட்டல்கள், சாலையோர கடைகளில் அதிக அளவில் பிளாஸ்டிக் பைகள் உபயோகிக்கின்றன.

    இதுகுறித்து கொடைக்கானல் நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்தும் எந்த விட நடவடிக்கை எடுக்க வில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி இந்த பிளாஸ்டிக் பைகளை கடையில் உபயோகிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

    Next Story
    ×