search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எட்டயபுரத்தில் ஓடும் பேருந்தில் பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை
    X

    எட்டயபுரத்தில் ஓடும் பேருந்தில் பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை

    தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் ஓடும் பேருந்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    எட்டயபுரம்:

    மதுரை திருமங்கலம் தாலுகா வேப்பன்குளத்தை சேர்ந்தவர் விஜய். கட்டிடத்தொழிலாளி. இவரது மனைவி முத்துமாரி (வயது35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். முத்துமாரிக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. பல இடங்களில் வைத்தியம் பார்த்தும் வயிற்றுவலி தீரவில்லை. இதில் வாழ்கையில் வெறுப்படைந்து காணப்பட்டார்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்செந்தூருக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் நேற்று மீண்டும் மதுரை செல்வதற்காக திருச்செந்தூரில் இருந்து பேருந்தில் ஏறினார்.

    பஸ் எட்டயபுரம் அருகே உள்ள எப்போதும் வென்றான் அருகே வந்த போது பேருந்தில் இருந்து மயங்கிய நிலையில் காணப்பட்டார். அப்போது அருகில் இருந்தவர்கள் முத்துமாரியிடம் விசாரித்த போது அவர் வி‌ஷத்தை குடித்து விட்டதாக கூறினார்.

    இதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளியவாறு உயிருக்கு போராடினார். உடனடியாக பேருந்தை நிறுத்தி 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    Next Story
    ×