என் மலர்

  செய்திகள்

  ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று வெவ்வேறு விபத்துக்களில் 2 பேர் பலி
  X

  ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று வெவ்வேறு விபத்துக்களில் 2 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இன்று வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற விபத்துக்களில் 2 பேர் பலியானார்கள்.
  ஸ்ரீவில்லிபுத்தூர்:

  மதுரை ஜெய்ஹிந்து புரத்தைச் சேர்ந்தவர் மாயாண்டி (வயது19). இவர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலைய பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார்.

  இன்று காலை மாயாண்டி, தனது நண்பர்கள் சுந்தர், கல்யாணப்பெருமாள் ஆகியோருடன் ஒரே மோட் டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார்.

  ஸ்ரீவில்லிபுத்தூர்- செண்பகதோப்பு சாலையில் மறவமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

  படுகாயம் அடைந்த மாயாண்டி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். உயிருக்கு போராடிய சுந்தர், கல்யாணப்பெருமாளை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் 2 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

  விபத்து குறித்து மம்சாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் வைரமுத்து (29), டிராக்டர் டிரைவர். இவர் இன்று காலை திருவண்ணாமலைக்கு டிராக்டரில் சென்றார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த வைரமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

  இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
  Next Story
  ×