என் மலர்

  செய்திகள்

  சேலத்தில் விபத்து- ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பலி
  X

  சேலத்தில் விபத்து- ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலத்தில் இன்று காலை லாரி மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
  சேலம்:

  சேலம் மாவட்டம் காரிப்பட்டி அருகே உள்ள நாட்டாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 50). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் இன்று காலை சேலத்திற்கு வந்து விட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டார்.

  சேலம் செரி ரோடு அம்பேத்கர் சிலை அருகே சென்ற போது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரியில் மோதி கீழே விழுந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியின் பின் சக்கரம் அவர் உடலில் ஏறி இறங்கியதால் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

  தகவல் அறிந்த அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
  Next Story
  ×