என் மலர்

  செய்திகள்

  திருவாரூரில் நிதி நிறுவன ஊழியர்கள் மீது தாக்குதல் பெட்டிக்கடைக்காரர் கைது
  X

  திருவாரூரில் நிதி நிறுவன ஊழியர்கள் மீது தாக்குதல் பெட்டிக்கடைக்காரர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவாரூரில் நிதி நிறுவன ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பெட்டிக்கடைக்காரரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திருவாரூர்:

  திருவாரூரை சேர்ந்தவர் ராஜகணபதி (வயது 26). இவரும் குடவாசலை சேர்ந்த மாரிமுத்து (30) என்பவரும் இருசக்கர வாகன பைனான்ஸ் நிறுவனத்தில் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

  இந்த பைனான்ஸ் நிறுவனம் மூலம் எண்கண்ணை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மோட்டார் சைக்கிள் வாங்கி உள்ளார். அவர் அதற்கு செலுத்த வேண்டிய 4 மாத தவணை தொகையை கட்டவில்லை என்று கூறப்படுகிறது.

  இந்தநிலையில் மணிகண்டன் நேற்று திருவாரூரில் உள்ளது தனது நண்பர் ஜெயராஜ் என்பவர் பெட்டி கடைக்கு சென்று பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு சென்ற ராஜகணபதியும், மாரி முத்தும், மணிகண்டனிடம் பணத்தை கட்டும்படி கூறியுள்ளனர். அப்போது தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த மணிகண்டனும், ஜெயராஜும், ராஜகணபதியையும் மாரிமுத்துவையும் தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த அவர்கள் திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  இதுபற்றிய புகாரின்பேரில் திருவாரூர் டவுன் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சரோண்யா வழக்குப்பதிவு செய்து ஜெயராஜை கைது செய்தார். மேலும் தலைமறைவான மணிகண்டனை தேடி வருகிறார்.

  Next Story
  ×