search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு ஆஸ்பத்திரியில் புற்று நோயாளிக்கு சிகிச்சை அளிக்க லஞ்சம் - மனித உரிமை கமி‌ஷனில் புகார்
    X

    அரசு ஆஸ்பத்திரியில் புற்று நோயாளிக்கு சிகிச்சை அளிக்க லஞ்சம் - மனித உரிமை கமி‌ஷனில் புகார்

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் புற்றுநோயாளியிடம் நர்சு, ஊழியர்கள் லஞ்சம் கேட்டது தொடர்பாக 2 வாரங்களுக்குள் பதிலளிக்க மருத்துவ கல்வி இயக்குனருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவை அமைப்பின் பொதுச் செயலாளர் ஜாபர்அலி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எங்கள் அமைப்பை சேர்ந்த ஆணையப்பன் என்பவர் புற்றுநோய் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரிடம் நர்சுகள், தொழில்நுட்ப பணியாளர்கள், கடைநிலை ஊழியர்கள் ஆகியோர் சிகிச்சைக்காக பணம் கேட்டுள்ளனர்.

    அவர் பணம் கொடுக்காததால் சிகிச்சை அளிப்பதை வேண்டுமென்றே தாமதம் செய்கின்றனர். இதுபோன்ற குறைகளை களைவதற்காக மருத்துவ கண்காணிப்பு குழுவும் இந்த மருத்துவமனையில் இதுவரை அமைக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை விசாரித்த மனித உரிமைகள் ஆணையத்தின் நீதிபதி டி.ஜெயசந்திரன் இது தொடர்பாக 2 வாரங்களுக்குள் விளக்கமளிக்க கோரி மருத்துவக் கல்வி இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
    Next Story
    ×