என் மலர்
செய்திகள்

செவ்வாப்பேட்டையில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
செவ்வாப்பேட்டையில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
செவ்வாப்பேட்டை:
செவ்வாப்பேட்டை அடுத்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் தேசபக்தன். இவரது மனைவி உஷா. இவர்கள் இருவரும் பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று காலை இருவரும் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 8 பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளை போனது தெரிய வந்தது.
இதுபற்றி செவ்வாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் (பொறுப்பு) வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார். #Tamilnews

Next Story