என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி- அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
    X

    புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி- அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை மாவட்டம், ஓட்டக்குளம், மோசக்குடி ஆகிய இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர். சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், ஓட்டக்குளம்,  மோசக்குடி ஆகிய இடங்களில்  நடைபெற்ற  ஜல்லிக்கட்டு போட்டிகளை  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  டாக்டர். சி.விஜயபாஸ்கர் தொடங்கி  வைத்தார்.

    போட்டிக்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார்.  தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.

    இப்போட்டிகளில் அமைச்சர் ஜல்லிக்கட்டு உறுதி  மொழியினை வாசிக்க  அனைத்து  மாடுபிடி வீரர்களும் ஜல்லிக்கட்டு உறுதி மொழியினை  எடுத்துக் கொண்டனர். பின்னர் அமைச்சர் பேசியதாவது:-

    தமிழர்களின் பாரம்பரியமான வீர விளையாட்டாக  ஜல்லிகட்டு திகழ்கிறது. அதனடிப்படையில் இன்றைய  தினம் ஓட்டக்குளம், மோசக் குடியில் ஜல்லிக் போட்டி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஓட்டக்குளம், மோசக்குடியில் ஒவ்வொரு ஆண்டும் நிரந்தரமாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் வகையில் பெரும் முயற்சி எடுத்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

    ஓட்டக்குளம் ஜல்லிக்கட்டு  போட்டியில் 700மாடுகளும், 250 மாடு பிடி வீரர்கள், மோசக்குடி ஜல்லிக்கட்டு போட்டியில் 1500 காளைகளும், 300 மாடுப் பிடி வீரர்களும் கலந்து கொண்டு உள்ளனர். மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் முழு மருத்துவ பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டி அரசு விதிமுறைகளின் படி  சிறப்பாக நடத்தி முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு  உத்தர விடப்பட்டுள்ளது.

    இவ்வாறு  அவர்  பேசினார். #Jallikattu
    Next Story
    ×