என் மலர்

  செய்திகள்

  அண்ணாசாலையில் நகைக்கடையில் 6 பவுன் நகை திருடிய பெண்கள்
  X

  அண்ணாசாலையில் நகைக்கடையில் 6 பவுன் நகை திருடிய பெண்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை அண்ணாசாலையில் உள்ள நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து 6 பவுன் தங்கத்தை திருடிய 2 பெண்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  சென்னை:

  சென்னை ஆயிரம் விளக்கு அஜிஸ் மூல்க் 2-வது தெருவைச் சேர்ந்தவர் வசந்தராஜ். அண்ணாசாலையில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

  இவரது கடைக்கு நேற்று மாலை 2 பெண்கள் நகை வாங்க வந்தனர். சிறிது நேரம் அங்கு நின்றபடி நகையின் மாடல்களை பார்த்தனர். பின்னர் நகை மாடல் பிடிக்கவில்லை என்று கூறி நகை வாங்காமல் சென்று விட்டனர்.

  அவர்கள் சென்றவுடன் வசந்தராஜ் நகைகளை சரி பார்த்தார். அப்போது 6 பவுன் நகை குறைந்தது.

  நகை வாங்க வந்தது போல 2 பெண்களும் 6 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பி ஓடியது தெரிய வந்தது.

  இது தொடர்பாக வசந்த ராஜ் ஆயிரம்விளக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்து 2 பெண்களையும் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
  Next Story
  ×