search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தியமங்கலம் தண்டு மாரியம்மன் கோவில் குண்டம் விழா: பக்தி கோ‌ஷம் முழங்க தீ மிதித்த பக்தர்கள்
    X

    சத்தியமங்கலம் தண்டு மாரியம்மன் கோவில் குண்டம் விழா: பக்தி கோ‌ஷம் முழங்க தீ மிதித்த பக்தர்கள்

    சத்தியமங்கலம் தண்டு மாரியம்மன் கோவில் குண்டம் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை வழிபட்டு தீக் குண்டம் இறங்கினர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை தண்டு மாரியம்மன் கோவில் குண்டம் விழா கடந்த 18-ந் தேதி பூச்சாட்டு தலுடன் தொடங்கியது. கடந்த 19-ந் தேதி கம்பம் நடப்பட்டது. 12 அடி உயரம் 2 அடி அகலம் கொண்ட பெரிய அளவிலான கம்பத்துக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீர் ஊற்றி வழிபட்டனர். குண்டத்துக்கு தேவையான விறகுகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். நேற்று இரவு குண்டம் பற்ற வைக்கப்பட்டது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் விழா இன்று (புதன்கிழமை) காலை நடந்தது. முதலில் கோவில் தலைமை பூசாரி கோகுல் குண்டம் இறங்கி தீ மிதித்தார். அவரை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை வழிபட்டு தீக் குண்டம் இறங்கினர்.

    இதில் பெண்கள் மற்றும் ஆண்கள் என 5 ஆயிரத்துக் கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மா... தாயே... மாரியம்மா... என பக்தி கோ‌ஷம் முழங்க தீ மிதித்தனர். சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். நாளை (வியாழக் கிழமை) கிடாய் வெட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து இரவு கம்பம் பிடுங்கப்பட்டு ஆற்றில் விடப்படுகிறது. 5-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 10-ந் தேதி மறு பூஜையும் நடக்கிறது. 

    Next Story
    ×