என் மலர்
செய்திகள்

தாம்பரத்தில் தீ விபத்து - 25 நடைபாதை கடைகள் எரிந்து நாசம்
தாம்பரத்தில் தீ விபத்தில் 25 நடைபாதை கடைகள் எரிந்து நாசமடைந்தன. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
தாம்பரம் சண்முகம் சாலை பாரதி திடலில் 100-க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் உள்ளன. இங்கு காய்கறிகள், பழங்கள், வளையல்கள், பாசிமணிகள் போன்றவை விற்பனை செய்யப்பட்டு வந்தன. நேற்று இரவு வழக்கம் போல் கடைகளை மூடிவிட்டு அனைவரும் வீட்டுக்கு சென்றுவிட்டனர். இரவு 12 மணியளவில் அங்குள்ள கடைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்று வேகமாக வீசியதால் அடுத்தடுத்த கடைகளுக்கு தீ பரவியது.
இதற்கிடையே தீயணைப்பு படையினர் 2 வண்டிகளில் வந்து தீயை போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் 25 கடைகள் எரிந்து சாம்பலாயின. ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்தன. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. தீ விபத்தில் எரிந்த கடைகளை எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்த்தார்.
Next Story






