என் மலர்
செய்திகள்

சத்யபாமா பல்கலை.யில் நீட் பயிற்சி பெறும் மாணவர்களுடன் அமைச்சர் கலந்துரையாடல்
சத்யபாமா பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் நீட் தேர்வு பயிற்சி முகாமில் பயிலும் மாணவ, மாணவிகளிடம் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துரையாடினார்.
சென்னை:
சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மெஞ்சேரியில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைகழக வளாகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் போட்டித் தேர்வுக்கான உண்டு உறைவிடப் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் சார்பில் இங்கு நடைபெறும் நீட் தேர்வு பயிற்சி முகாமில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 12 மாவட்டங்களில் இருந்து 63 மாணவர்கள், 287 மாணவிகள் என 350 மாணவர்கள் இங்கு பயிற்சி பெறுகின்றனர்.
மாணவ மாணவிகளை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேரில் சந்தித்து அவர்களுக்கு அளிக்கும் பயிற்சி குறித்தும், அவர்களுடனும் சிறிது நேரம் கலந்துரையாடினார். அப்பொழுது மாணவ மாணவிகளின் குறை மற்றும் நிறைகளை அமைச்சர் கேட்டறிந்தார். உடன் சத்திபாமா நிகர்நிலை பல்கலைக்கழக இணை வேந்தர் மரியஜினா ஜான்சான், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன் உள்ளிட்டோர் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே முதன்முறையாக நீட் தேர்வுக்கு உண்டான முகாம் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், இப்பயிற்ச்சியினால் மாணவர்கள் நீட் தேர்வை துணிச்சலுடன் எதிர்கொள்வார்கள்” என்று தெரிவித்தார். #TamilNews

Next Story