என் மலர்

    செய்திகள்

    முத்துப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
    X

    முத்துப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    முத்துப்பேட்டை அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் முன்பக்கத்தில் மேற்கூரையை வெல்டிங் வைத்த போது எதிர்பாராத விதமாக வாலிபரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலயே அவர் உயிரிழந்தார்.
    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அருகே உள்ள நாச்சிகுளம் பகுதியில் ராசுதீன் என்பவர் புதிதாக வீடுகட்டி வருகிறார். அங்கு அதிராம்பட்டிணம் பகுதியை சேர்ந்த சொக்கலிங்கம் என்பவர் ஒப்பந்த முறையில் வேலை பார்த்து வருகிறார். அதற்காக அதிராம்பட்டிணம் கரையூர் பகுதியை சேர்ந்த பாஞ்சாலன் மகன் குணாவை (வயது 20). வேலைக்கு அழைத்து சென்றுள்ளார்.

    இந்த நிலையில் நேற்று புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் முன்பக்கத்தில் மேற்கூரையை வெல்டிங் வைப்பதற்காக குணா சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கிவீசப்பட்டு உடல் கருகி சம்பவ இடத்திலேயே குணா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குணா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    Next Story
    ×