search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப்பாய்ந்ததையும் படத்தில் காணலாம்.
    X
    வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப்பாய்ந்ததையும் படத்தில் காணலாம்.

    விராலிமலை அருகே ஜல்லிக்கட்டு- 2,000 காளைகள் சீறிப்பாய்ந்தன

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அம்மன் குளத்தில் உள்ள ஸ்ரீபட்டமரத்தான் கருப்பசாமி கோவில் விழாவையொட்டி இன்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. #Jallikattu
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அம்மன் குளத்தில் உள்ள ஸ்ரீபட்டமரத்தான் கருப்பசாமி கோவில் விழாவையொட்டி இன்று (29-ந்தேதி) ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜய பாஸ்கர் தலைமை தாங்கி ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். இதற்காக 2 ஆயிரம் காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

    முதலில் வாடிவாசலில் இருந்து பட்டமரத்து கருப்பசாமி கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதைத் தொடர்ந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது.

    வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளில் சில ஆக்ரோ‌ஷமாக சீறிப்பாய்ந்து வெளியே வந்தது. தொடர்ந்து அந்த காளைகள் களத்தில் நின்று விளையாடி தன்னை அடக்க வந்த வீரர்களை விரட்டியடித்தது.

    இருப்பினும் களத்தில் வீரத்துடன் நின்றிருந்த மாடு பிடிவீரர்கள் தன்னை விரட்டிய காளையை விடாப்பிடியாக நின்று அடக்கி அசத்தினர். இதில் வெற்றி பெற்ற காளைக்கு அதன் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கி வெற்றிக்கொடி நாட்டிய வீரர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

    குறிப்பாக கார், மோட்டார் சைக்கிள்கள், பிரிட்ஜ், வாஷிங் மிஷின், மிக்சி, கட்டில், சில்வர் பாத்திரங்கள், பீரோ, சேர், தங்கம் மற்றும் வெள்ளி நாணயம், ரொக்கப் பணம் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

    விராலிமலையில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்த காட்சி.

    ஜல்லிக்கட்டு விதிமுறைகளின்படி நடைபெறுகிறதா என்பதை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில் வருவாய்துறையினர், புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய்துறையினர், கால் நடைத்துறையினர் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்காணித்தனர்.

    இதே போல் ஜல்லிக்கட்டில் காயமடைந்த வீரர்களுக்கு உடனடியாக தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதற்காக தற்காலிக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் 108 ஆம்புலன்சு வாகனங்கள் தயார் நிலையில் இருந்தன.

    ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் கே.சி.கருப்பணன், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், சரோஜா, சேவூர் ராமச்சந்திரன், கே.டி.ராஜேந்திரபாலாஜி, முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, கோகுல இந்திரா, சின்னையா, பால கங்கா எம்.பி., பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் பி.டி.அரசகுமார் மற்றும் திரளானோர் பார்த்து ரசித்தனர். #Jallikattu #Tamilnews
    Next Story
    ×