என் மலர்
செய்திகள்

அறந்தாங்கி அருகே சொத்து தகராறில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய உறவினர்
அறந்தாங்கி அருகே சொத்து தகராறில் தம்பி மனைவியை அரிவாளால் வெட்டிவிட்டு, மைத்துனர் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அறந்தாங்கி:
அறந்தாங்கியை அடுத்த வாட்டாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வேலு மகன் சுப்பிரமணியன். இவரது மனைவி கார்த்திகா (வயது 22). சுப்பிரமணியனின் சகோதரர் பாண்டியன். சுப்பிரமணியனும், பாண்டியனும் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர்.
சுப்பிரமணியனுக்கும் பாண்டியனுக்கு சொத்து பிரச்சினை இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு சுப்பிரமணியன் வீட்டில் இல்லாத போது, சொத்து பிரச்சினை தொடர்பாக பாண்டியனுக்கும் கார்த்திகாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கார்த்திகா எதிர்த்து பேசியதால் ஆத்திரமடைந்த பாண்டியன் அங்கு இருந்த அரிவாளால் கார்த்திகாவை வெட்டியுள்ளார். இதில் கார்த்திகா ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
அப்போது சப்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கார்த்திகாவை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கார்த்திகாவை அரிவாளால் வெட்டியதால் மனமுடைந்த பாண்டியன் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சிக் கொல்லி மருந்தை குடித்துள்ளார். உடனே அவரையும் அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீஸ் இன்ஸ் பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார். அறந்தாங்கி அருகே சொத்து தகராறில் தம்பி மனைவியை அரிவாளால் வெட்டிவிட்டு, மைத்துனர் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
Next Story






