என் மலர்

    செய்திகள்

    பெரியகுளம் அருகே சாலை விபத்தில் 2 பேர் பலி
    X

    பெரியகுளம் அருகே சாலை விபத்தில் 2 பேர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பெரியகுளம் அருகே நடந்த சாலை விபத்தில் 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.

    தேனி:

    பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட எருமலைநாயக்கன்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது55). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜநல்லான் (43).

    2 பேரும் தேனி அருகே உள்ள உறவினர் வீட்டு குடும்ப பிரச்சினையை பேசி தீர்ப்பதற்காக சென்றனர். பின்பு 2 பேரும் மோட்டார் சைக்கிளில் எருமலைநாயக்கன்பட்டிக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

    தேனி-பெரியகுளம் சாலையில் லட்சுமிபுரம் பகுதியில் வந்தபோது அவ்வழியே வேகமாக வந்த வாகனம் இவர்கள் மீது மோதியது.

    இதில் 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்தை ஏற்படுத்திய வாகனம் கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து சென்று விட்டது. அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தபோதும் அவர்கள் தப்பி சென்றனர்.

    இது குறித்து தென்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து 2 பேர் உடல்களையும் கைப்பற்றி தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #tamilnews

    Next Story
    ×