என் மலர்

    செய்திகள்

    திருத்தணி அருகே கார்-வேன் மோதல்: சென்னையை சேர்ந்தவர் பலி
    X

    திருத்தணி அருகே கார்-வேன் மோதல்: சென்னையை சேர்ந்தவர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருத்தணி அருகே கார் மற்றும் வேன் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    பள்ளிப்பட்டு:

    சென்னை, வானகரத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 42). இவர் நண்பர்கள் மதன், மணிகண்டன், சரவணன் ஆகியோருடன் காரில் ஆந்திர மாநிலம் நகரிக்கு சுற்றுலா சென்றார்.

    பின்னர் அவர்கள் நேற்று இரவு சென்னை நோக்கி திரும்பி வந்து கொண்டு இருந்தனர். திருத்தணி அருகே லட்சுமாபுரம் அருகே வந்த போது, எதிரே சென்னையில் இருந்து வந்த ஆந்திராவை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் வேன் திடீரென கார் மீது மோதியது.

    இதில் காரில் இருந்த வெங்கடேஷ் பரிதாபமாக இறந்தார். மேலும் மதன், சரவணன், மணிகண்டன் மற்றும் வேனில் இருந்த ஆந்திராவை சேர்ந்த விஜயலட்சுமி, சீனிவாசன், பாரதி உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

    அவர்களுக்கு திருத்தணி, சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதற்கிடையே விபத்து பற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். சாலை வளைவில் உள்ள முட்புதர்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும், அதனை அகற்ற வேண்டும் என்றும் கோரி அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. டி.எஸ்.பி. பாலச்சந்திரன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர். #TamilNews
    Next Story
    ×