என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோழத்தரம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
    X

    சோழத்தரம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

    சோழத்தரம் அருகே உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மன வேதனை அடைந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகள் செம்மலர்(வயது 16). இவர் 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இந்தநிலையில் செம்மலரின் தாய் சமீபத்தில் இறந்து விட்டார். இதனைத் தொடர்ந்து செம்மலர் சோழத்தரம் அருகே உள்ள மாமங்கலத்தில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கியிருந்தார். அவருக்கு திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த செம்மலர் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு காட்டுமன்னார்கோவில் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக் காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு செம்மலர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சோழத்தரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மரிய அந்தோணிஜோசப் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews

    Next Story
    ×