என் மலர்
செய்திகள்

திருமங்கலத்தில் மர்ம காய்ச்சலுக்கு 9-ம் வகுப்பு மாணவன் பலி
பேரையூர்:
திருமங்கலம் ராமச்சந்திர தடாகத்தெருவைச் சேர்ந்தவர் காதர்பாபா. இவரது மகன் அகமது முக்சின் (வயது 15). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த ஒரு வாரமாக அகமது முக்சினுக்கு தொடர் காய்ச்சல் இருந்து வந்தது. மருத்துவர்களிடம் காண்பித்தும் குணமாகவில்லை.
இந்த நிலையில் நேற்று இரவு அகமது முக்சினின் உடல் நிலை மோசமானது. உடனே அவரது பெற்றோர் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அகமது முக்சின் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மாணவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப் பட்டது.
திருமங்கலம் பகுதியில் சுகாதார சீர்கேடுகள் நிலவி வருவதால் பலர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து காய்ச்சல் பரவாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.