என் மலர்

  செய்திகள்

  போலீசார் - மின்சாரம் தாக்கி பலியான 10 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் உதவி: எடப்பாடி பழனிசாமி
  X

  போலீசார் - மின்சாரம் தாக்கி பலியான 10 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் உதவி: எடப்பாடி பழனிசாமி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உயிரிழந்த காவலர்கள் மற்றும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
  சென்னை:

  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த விவேகானந்தன் உடல்நலக்குறைவால் காலமானார். சென்னை நுண்ணறிவுப் பிரிவில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஸ்ரீதேவி உடல்நலக் குறைவால் காலமானார்.

  திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த வெங்கிடுசாமி சாலை விபத்தில் உயிரிழந்தார்.

  சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை1, இ-நிறுமம், 17ம் அணியில் காவலராகப் பணிபுரிந்து வந்த பாலாஜி உடல்நலக் குறைவால் காலமானார். தாழையூத்து காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த அகிலா சாலை விபத்தில் உயிரிழந்தார்.

  கிருஷ்ணகிரி மாவட்டம், பெத்ததாளப்பள்ளி தரப்பு பனந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம், சின்னநெற்குணம் மதுரா எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி லலிதா மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

  திருவண்ணாமலை மாவட்டம், பாளையம்-2 கிராமத்தைச் சேர்ந்த பாலு மனைவி மகேஸ்வரி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். திருவள்ளுர் மாவட்டம், பாண்டேஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்த களப்பணி உதவியாளர், மாரிமுத்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

  வேலூர் மாவட்டம், சென்னசமுத்திரம் மதுரா மாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சேகர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

  மேற்கண்ட நிகழ்வுகளில் உயிரிழந்த காவலர்கள் மற்றும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த மேற்கண்ட 10 நபர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

  இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
  Next Story
  ×