என் மலர்
செய்திகள்

கொடுமுடி அருகே ரெயில் மோதி முதியவர் பலி
கொடுமுடி அருகே தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொடுமுடி:
கொடுமுடி அருகே கொளாநல்லி என்ற இடத்தில் தண்டவாளத்தில் சம்பவத்தன்று முதியவர் ஒருவர் உடல் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில் இறந்து கிடந்தவர் கொடுமுடி அடுத்த வீரப்பகவுண்டன் காட்டூரை சேர்ந்த பழனிசாமி (77) என தெரியவந்தது. பழனிசாமி ரெயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்த போது ரெயில் மோதி இறந்தது தெரிய வந்தது.
இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story